பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து. 4 பேர் உயிரிழப்பு. 8 பேர் படுகாயம். காவல்துறையினர் விசாரணை;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து. 4 பேர் உயிரிழப்பு. 8 பேர் படுகாயம். காவல்துறையினர் விசாரணை.
சிவகாசி அருகே களத்தூரில் ராமு RKVM பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது இதில் அங்கு பணிபுரிந்த 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.மேலும் 8 பேர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி அரு கே களத்தூர் கிராமத்தில் உள்ள வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான RKVM பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியை மேற்கொண்டபோது பட்டாசு மருந்து தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 7க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாயின. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கும் மற்றும் தீயை அணைப்பதற்கும் சிவகாசியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குமார், பெரியசாமி, செல்வம், உட்பட 4 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். கோபாலகிருஷ்ணன், முனியாண்டி, காளியப்பன், அழகர்சாமி, முருகேசன் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்..
மேலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்கள் விபரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் விசாரணை நடத்தி வருகின்றனர்.