ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அமமுக பெண் வேட்பாளருக்கு நடனமாடி வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் வேட்பாளருக்கு அமமுக தொண்டர்கள் குக்கர் சின்னத்துடன் நடனமாடி வரவேற்பு அளித்தனர்.;

Update: 2021-03-30 03:46 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி அமமுக பெண் வேட்பாளருக்கு நடனமாடியபடி வரவேற்பு அளித்த கட்சி தொண்டர்கள்.  சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அமமுக வேட்பாளர் சங்கீத பிரியா மற்றும் கட்சியினருடன் சென்று வன்னியம்பட்டி வல்லி நாச்சியார் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருக்கு தொண்டர்கள் தாரை தப்பட்டைகள் முழங்க வரவேற்பு அளித்தனர். தங்களது சின்னமான குக்கர் சின்னத்தை அடையாளம் காட்டும் விதமாக இளைஞர்கள் குக்கரை கையில் வைத்துக்கொண்டு சாலைகளில் நடனமாடி வரவேற்பு அளித்தனர். மேலும் ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்களிடையே வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News