ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல ( 9.4.21. முதல் 12.4.21) அமாவாசையை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . மேலும் பக்தர்கள் மலை ஏறும் நேரம் குறைக்கபட்டுள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 60 வயதுக்கு மேல் உள்ள பெரியோர்களுக்கு அனுமதி கிடையாது. கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மலைமேல் தங்குவதற்கு கட்டாயம் அனுமதி கிடையாது எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.