விருதுநகர் மாவட்டம், சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.;
சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
விருதுநகர் மாவட்டம்,வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் 24-ந் தேதி வரை4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 23-ந் தேதியன்று பவுர்ணமியன்று சுந்தரமகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களும், 10 வயதுக்கு உட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அதேபோல, இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்கிற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.