திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: தங்கபாலு கணிப்பு
அடுத்த முதல்வராக ஸ்டாலின் ஆட்சி அமைப்பார் என முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு ஸ்ரீவில்லிபுத்தூரில் பேச்சு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகின்ற 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாதவ ராவை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் மாநில தலைவருமான கே.வி தங்கபாலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளளிடம் பேசும்போது, திமுக காங்கிரஸ் மாபெரும் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் பிஜேபி அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் எல்லா இடங்களிலும் எல்லா பகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தருகிறார்கள். 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் அவர்கள் வருவார்கள்.
தமிழ் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், மத்திய பிஜேபியின் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, அதனை ஆதரிக்கும் அதிமுக அரசை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வேண்டும். தமிழ் நாட்டில் நல்லாட்சி வேண்டும், நல்ல தலைமை வேண்டும்.
எங்களது இந்த பிரச்சாரம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதை மக்கள் நம்புகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்.
நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை ஸ்டாலின் தலைமையில் நாங்கள் நிறைவேற்றி தருவோம். ஏனென்றால் ஏற்கனவே மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி கூட்டணி அரசு நிறைய திட்டங்கள் நிறைவேற்றியது. தமிழகத்தில் தலைவர் கலைஞர் நிறைவேற்றிய திட்டங்கள் அதற்கு சாட்சியாக உள்ளது எங்களை நம்பி மக்கள் வாக்களிப்பதற்கு அது தான் முக்கிய காரணம்.
நாங்கள் மக்களுக்காகவே இருக்கிறோம், மக்களுக்காகவே பாடுபடுகிறோம் மக்களை உயர்த்துவோம். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் அவர்கள் போட்டியிடுகிறார்கள் அனைத்து கூட்டணி கட்சியினரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு, தமிழகத்தில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய பாடுபடுவோம் என கே எல் தங்கபாலு தெரிவித்தார்