பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகதில் மனு கொடுக்கும் போராட்டம்.;

Update: 2021-11-24 12:20 GMT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகதில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

பட்டா, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகதில் மனு கொடுக்கும் போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக குடியிருக்க வீடு வழங்க வேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், 60 வயதான அனைவருக்கும் முதியோர் பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வட்டாட்சியரிடம் வழங்கினர்.

Tags:    

Similar News