தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் கைது செய்யக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு.50 பேர் கைது.
நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்மபுரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த நபர் நாம் தமிழர் கட்சி பேச்சாளர் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக கூட்டம் கைவிடப்பட்டது. இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்ககோரியும், சாட்டை முருகன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என காவல்துறையினர் தெரிவித்ததால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதன் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.