வெடி விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: ஆலை உரிமையாளர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவான ஆலை உரிமையாளர் கைது.

Update: 2022-01-13 07:06 GMT

உரிமையாளர் வழிவிடு முருகன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே களத்தூர் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 1 ஆம் தேதி வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியை மேற்கொண்டனர். பட்டாசு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் 7க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாயின. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கும் மற்றும் தீயை அணைப்பதற்கும் 3 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டன. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குமார், பெரியசாமி, முருகேசன், செல்வம், முனியாண்டி உட்பட 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். கோபாலகிருஷ்ணன், காலியப்பன், அழகர்சாமி, வேல்முருகன், 8 வயது சிறுவன் மனோஅரவிந்த், கனகரத்தினம் என்ற ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதில் 4 நபர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டனர்.பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆலையின் உரிமையாளர் வழிவிடு முருகன் தலைமறைவானார். 3 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்த நிலையில் உரிமையாளர் வழிவிடு முருகனை கைது செய்து நத்தம்பட்டி காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News