கிணற்றில் தவறி விழுந்த 5 அடி நீள மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Update: 2022-01-11 12:13 GMT

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் குலாலர் தெருவைச் சேர்ந்த பிச்சராசு என்பவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள கிணற்றில் நேற்று மாலை மலைப்பாம்பு ஒன்று விழுந்துள்ளது.

இதனைக் கண்ட தோப்பின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த வனத்துறையினர் இன்று 3 மணி நேரத்திற்க்கும் மேலாக பெரும் சிரமங்களுக்கிடையே 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கிணற்றுக்குள் இருந்து பத்திரமாக மீட்டனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்குள் சென்று வனத்துறையினர் விட்டனர்.

Tags:    

Similar News