ஸ்ரீவில்லிபுத்தூரில் வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேர் கைது: வனத்துறையினர் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் மிளா வேட்டை ஆடியதாக 3 பேர் கைது. இரண்டு சக்கர வாகனம் மற்றும் இறைச்சிகள் பறிமுதல்.;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் மிளா வேட்டை ஆடியதாக 3 பேர் கைது இரண்டு சக்கர வாகனம் மற்றும் இறைச்சிகள் பறிமுதல் செய்து வனதுறையினர் விசாரணை.
மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் எல்லைக்குட்பட்டது ரெங்கர் பீட் பகுதி இந்தப் பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் தனிப்படை அமைத்து வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது மான் மற்றும் மிளா வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வனத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபட்டவர்கள் பெருமல் சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் வெள்ளைச்சாமி வேல்முருகன் என்பது தெரியவந்தது. மேலும் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. வன வேட்டை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.