விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 2013 பேட்ச் காவலர்கள் நிதி உதவி

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 2013-பேட்ச் காவலர்கள் 15 லட்சம் நிதி உதவி.;

Update: 2022-01-29 16:36 GMT

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 2013-பேட்ச் காவலர்கள் 15 லட்சம் நிதி உதவி அளித்துள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 2013-பேட்ச் காவலர்கள் 15 லட்சம் நிதி உதவி.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டுப்பூச்சி பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் தமிழக காவல்துறையில் 2013- ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்த 2013-பேட்ச் காவலர்கள் அனைவரும் சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் ஒன்றினைந்து ரூபாய் 15 லட்சம் நிதி திரட்டி 15 லட்சம் ரூபாய் நிதியை பன்னீர் செல்வத்தின் குடும்பத்திற்கு நேரில் சென்று வழங்கினர்.

உதவியை பெற்றுக் கொண்ட காவலரின் குடும்பங்கள் "எனது மகனுக்கு இறைவன் நல்ல ஆயுளை கொடுக்காவிட்டாலும் காவல்துறையில் நல்ல நண்பர்களை கொடுத்துள்ளான் எனவும், உதவி செய்த 2013 பேட்ச் காவலர்கள் அனைவருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.

Tags:    

Similar News