ஸ்ரீவில்லிபுத்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பாட்டத்துடன் சிறுவர், சிறுமியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல்கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதி - மேல ரத வீதி சந்திப்பில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் சிறுவர் சிறுமியர் சிலம்பாட்டம் ஆடி கோஷமிட்டவாறு 4 ரத வீதிகள் வழியாக சுற்றி வந்தனர். விழிப்புணர்வு பேரணியில் சிலம்பாட்டம், வாள்சுற்றி உள்ளிட்டவைகளை சுற்றியவாறு பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.