ஸ்ரீவில்லிபுத்தூரில் கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிரிக்கெட்டி விளையாடிய போது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2021-04-15 05:52 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பிரவீன்குமார் (14). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், பிரவீன்குமார் நேற்று வீட்டின் அருகில் இருந்த பூங்கா பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது பந்து அருகில் தோட்டத்தில் இருந்த பம்புசெட் அறைக்குள் விழுந்தது. அதனை எடுப்பதற்காக சென்றபோது, மோட்டர் அறையில் அறுந்து கிடந்த மின்சார ஒயரில் பிரவீன்குமாரின் கால் தவறுதலாக பட்டது.

இதில், மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வத்திராயிருப்பு போலீசார், பிரவீனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News