ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.;
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நகர காங்கிரஸ் தலைவர் பட்சிராஜா வி.சி.வன்னியராஜ் தலைமை ஆகியோர் தலைமை வகித்தனர். விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பெரியசாமி, மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகேசன், ஐ.என்.டி.யூ.சி. தங்கமாரி, நகர பொருளாளர் காமராஜர்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதைப் போல விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமையில் வன்னியம்பட்டி விளக்கில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குருநாதன் தலைமைவகித்தார் . மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் சூரிய நாராயணன், பிற்படுத்தப்பட்டோர் அணயின் மாநில பொதுச்செயலாளர் சக்கரையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூர்சாகிபுரம் மாயாண்டி, வன்னியம்பட்டி மகாலிங்கம், ஆறுமுகச்சாமி, படிக்காசுவைத்தான்பட்டி ராமர் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.