காட்டு யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் வாழை , தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை. உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.;

Update: 2021-02-10 03:45 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, கரடி, மான், மிலா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பிரதானமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா , வாழை விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிளவக்கல் அணை பகுதியில் இறங்கும் காட்டு யானைகள் தொடர்ந்து தோப்பிற்குள் நுழைந்து மரங்களை


சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிளவக்கல் அணை பகுதியில் ஜெயக்கொடி, சுந்தரம் ஆகியோர் 3 ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு இவர்களது விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் ஏராளமான வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.தொடர்ந்து இது போன்று காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளதாகவும் வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கவும் காட்டு யானையை விரட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News