நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சாத்தூரில் மதிமுகவினர் விருப்ப மனு அளிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மதிமுக கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர், ரகுராமன் மாவட்ட துணைக் செயலாளர்கள் லட்சுமணன், கோதன்டம், நகரச் செயலாளர் கனேஷ்குமார், ஒன்றியச்செயலாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன் மற்றும் விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் தேர்தல் பணிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
பின்னர் நகராட்சி வார்டுகளில் உள்ள மொத்தம் 24 வார்டு பதவிகளுக்கு 100க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதில் போட்டியிட விரும்புபவர்கள் வழங்கிய விருப்ப மனுக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் ஆகியோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.