வேலை நிறுத்தம்: 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இரண்டாவது நாள் வேலை நிறுத்ததால் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

Update: 2021-03-23 06:43 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக விளங்குவது தீப்பெட்டித் தொழில் இங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இங்கு தயாராகும் தீப்பெட்டியானது வெளி மாநிலங்கஞக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் தீக்குச்சி, காகிதம், ரசாயன மூலப்பொருட்கள், உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி செய்யும் பண்டல்களின் விலையை உயர்த்துமாறு கோரிக்கையை முன்வைத்து தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இத்தொழிலை சார்ந்து வாழும் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News