பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையில் பணம் இல்லாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் உயரிழந்தவர்களின் 25 குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையில் பணம் இல்லாததால் தொழிலாளர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நிவாரணம் வழங்குவதாக கூறி ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை 25 பேருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மட்டுமே பணம் இருந்துள்ளது. மற்ற 24 பேரின் காசோலையில் பணம் இல்லாததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினர் மாவட்ட கலெக்டர் கண்ணனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.