சாத்தூர் அருகே அடிப்படை வசதி கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சாத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

Update: 2021-12-24 10:22 GMT

சாத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள படந்தால் கிராமம் வளர்ந்து வரும் பகுதியாகும். இப்பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதைச் சுற்றியுள்ள பெரியார் நகர் வைகோ நகர் தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிளும் வளர்ந்து வரும் பகுதியாக இருந்து வருகிறது.

இப்பகுதியில் முறையான சாலை வசதிகளும் வாறுகால் வசதி மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் செய்து தரக்கோரி பஞ்சாயத்து நிர்வாகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை செய்யப்படவில்லை என்றும் கூறி இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாத்தூர் யூனியன் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க சென்றனர். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் திட்ட மேலாளர் இடம் தங்களது கோரிக்கை மனு வழங்கினர்.

அப்பொழுது பொதுமக்கள் திட்ட மேலாளரிடம் தங்களது குறைகளை கூறி முற்றுகையிட்டதால் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேலாளர் தங்களது குறைகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் பொதுமக்கள் ஒரு மாத காலத்திற்குள் தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து தரவில்லை என்றால் எங்களது குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்கப்படும் என்று கூறி கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News