சாத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநிலக்குழு கூட்டம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநில குழு கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில குழு கூட்டம் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாநில தலைவர் ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் அனைத்து சங்கங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட, நகர ,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு கொள்கையை அரசாணைப்படி வெளியிட வேண்டும் என அக்டோபர் 26ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்துவது; விருதுநகர் மாவட்ட நிர்வாகமே மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்; அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, கோட்டாட்சியர்கள் மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்த வேண்டுமெம் என்று, மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழகத்தில் சுமார் 15 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளன தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாத உதவித் தொகையினை ரூ 3000 இருந்து ரூ 5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் நடைபெறும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்பு என எல்லா உரிமைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அளவில் கிடைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
சாத்தூர் அருகே போத்திரெட்டி பட்டியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான மாநில பொருளாளர் சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் ஜீவா, விருதுநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் குமரேசன், மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன் பனை விதை விதைத்தனர்.