சாத்தூர் காமராஜபுரம் பகுதியில் மோட்டார்பைக்கை திருடிய நபரை நகர் போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியிலுள்ள காமராஜபுரம் தெருவில் பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மோட்டார்பைக்கை திருடிச் செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இது குறித்த புகாரின் பேரில் சாத்தூர நகர் போலீசார் மோட்டார்பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவும் பாேலீசார் தெரிவித்துள்ளனர்.