சாத்தூரில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பு முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு
சாத்தூரில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.
சாத்தூரில் மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பு முகாம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு மருத்தும் மற்றும் சமூக நலத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் நிகழ்ச்சி சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் தலைமையில் நடைபெற்றது.
சாத்தூர் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிறப்பு ஆலோசனை மற்றும் விளக்கங்களை மருத்துவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் வழங்கினார். மேலும் நோயாளிகளுக்கு இலவசமாக அரசு வழங்கும் மருந்துகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் மரு.கலுசிவலங்கம், சாத்தூர் ஆனணயாளர், நகர செயலாளர், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.