சாத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மரக்கன்றுகளுடன் வேட்பு மனு தாக்கல்
சாத்தூர் நகராட்சியில் மரக்கன்றுகளுடன் நாம் தமிழர் கட்சி சார்பில் கணவன் மனைவி இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைகளில் மரக்கன்றுகள் உடன் நாம் தமிழர் கட்சி சார்பில் கணவன் மனைவி இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு கடந்த மாதம் 28ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக மந்தமாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல் இறுதி நாளான இன்று விறுவிறுப்புடன் நடைபெற்றது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் நகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். மேலும் அவரது மனைவி சாமுண்டீஸ்வரி சாத்தூர் நகராட்சி தேர்தலில் 17வது வார்டில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் சாத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பசுமையை பாதுகாப்போம் என்று கையில் மரக்கன்றுகள் உடன் வித்தியாசமான முறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இருவர் மனு தாக்கல் செய்யதனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த கணவன், மனைவி இருவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் பசுமையை பாதுகாப்போம் என்று வலியுறுத்தி கையில் மரக்கன்றுகள் உடன் வித்தியாசமான முறையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தங்களுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த மரக்கன்றுகளை தேர்தல் அலுவலர்களிடமே வழங்கி விட்டு சென்றனர்.