விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

விருதுநகர், சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2021-12-04 09:26 GMT

சாத்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகர், சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த தொடர் மழை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சாத்தூர், இருக்கன்குடி, மேட்டமலை படந்தால், மேட்டுப்பட்டி, கொல்லபட்டி, சுப்ரமணியபுரம், சின்னக்காமன்பட்டி, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, வன்னிமடை, நள்ளி மற்றும் ஓடைப்பட்டி உள்ளிட்ட பல சுற்றுவட்டார பகுதியில் இரவு முழுவதும் விடியவிடிய தொடர் கன மழையாக கொட்டி தீர்த்தது.

இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் அதிகாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நகர்ப்பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர் இப்பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்வோர் அதிகாலை மழையால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டிபள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.

Tags:    

Similar News