சாத்தூரில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் ஆய்வு

சாத்தூர் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் பார்வையிட்டனர்.

Update: 2022-02-21 14:18 GMT

சாத்தூர் நகராட்சியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் பார்வையிட்டனர்.

சாத்தூர் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்டம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இதில் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

சாத்தூர் நகராட்சியில் 35 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்குப்பதிவு கருவி மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவற்றை சாத்தூர் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் நாளை அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் நாளை தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை தொடங்க உள்ளனர்.

வாக்குப்பதிவினை எண்ணுவதற்கு மையத்தில் 6 மேஜைகள் அமைக்கப்பட்டு 6 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணியின் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மற்றும் மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் பாலச்சந்தர் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

அங்கு சாத்தூர் நகராட்சி தேர்தல் அலுவலர் நித்தியா மற்றும் சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பா ஆகியோர் ஏற்பாடு நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர் .மேலும் எந்தவிதமான அசம்பாவிதங்கள் ஏற்படாவண்ணம் முறையாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்

Tags:    

Similar News