பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: ஆலை உரிமையாளர் கைது
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி சம்பவம் தொடர்பாக, ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள்ஓடைப்பட்டியில், கடந்த 5ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆலை உரிமையளர் பூமாரி, கருப்பசாமி (உயிரிழப்பு), ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய 5 பேர் மீது அஜாக்கிரத்தையாக செயல்பட்டது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த 4 பேரை இரண்டு தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பூமாரியை கைது செய்துள்ள காவல்துறை ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.