ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரானா தொற்று
சாத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.;
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கொரோனா நோய் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் நிலையில் அதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாத்தூரில் மாரியம்மன் கோவில் தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 4 பேருக்கு இன்று கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரையும் நகராட்சி நிர்வாகம் அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தி உள்ளனர். மேலும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள 6 வீடுகளை சுற்றி நகராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டு, பின்னர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்தனர்.