சாத்தூரில் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
சாத்தூரில் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.;
சாத்தூரில் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் யாதவர் திருமண மண்டபத்தில் சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியை சாத்தூர் நகரத் தலைவர் அய்யப்பன் ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பொங்கல் விழாவை முன்னிட்டு காலண்டர் மற்றும் புத்தாடை, கரும்பு ஆகியவற்றை சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சாத்தூர் நகர காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகிளா காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.