15 நாட்களுக்கு பிறகு அனுமதி: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
15 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதால் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.;
15 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று முதல் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று காலை பக்தர்கள் திரண்டனர். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.