சாத்தூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்

சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாசலபுரம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-07-18 08:00 GMT

(பைல் படம்)

சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாசலபுரம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் சாத்தூர் டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரை சேர்ந்த இசக்கிராஜ் (வயது 21), தாமோதர கண்ணன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News