பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் பலி

Update: 2021-02-12 08:30 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் விஜயகரிசல்குளம் தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பணியின் போது ஏற்பட்ட உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டது மேலும் இந்த வெடி விபத்தில் ஆலையில் பணி புரிந்த 9பேர் சம்பவ இடத்தில் பலியாதை அடுத்து மேலும் 36 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிவகாசி சாத்தூர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை அடுத்து சிவகாசி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 நபர்கள் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தனர் இதனால் உயிர் இழப்பு 17 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News