பதவியேற்க வந்த அர்ச்சகர் பதவியேற்க முடியாமல் பரிதவிப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெருமாள் கோவிலுக்கு பதவி ஏற்க வந்த அர்ச்சகர் பதவியேற்க முடியாமல் பரிதவிப்பு;
சாத்தூர் பெருமாள் கோவிலில் காலியாக இருந்த அர்ச்சகர் பணியிடத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை
சேர்ந்த சீனிவாசன் எனபவரை அறநிலை
துறை நியமனம் செய்தது.
அவர் காலை பெருமாள் கோவிலில் பதவியேற்க தனக்கு வழங்காய நியமன்
சாத்தூரில் அர்ச்சகராக பதவியேற்க வந்த அர்ச்சகர்
தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் நேற்று சென்னையில் 208 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சாத்தூர் பெருமாள் கோவிலில் காலியாக இருந்த அர்ச்சகர் பணியிடத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சீனிவாசன் எனபவரை அறநிலை துறை நியமனம் செய்தது. அவர் காலை பெருமாள் கோவிலில் பதவியேற்க தனக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்துடன் வந்தார். அப்போது அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருந்த ரெங்கநாதன் அர்ச்சகரின் குடும்பத்தினர் புதிதாக வந்த சீனிவாசனுடன் வாக்குவாதம் செய்தனர்.அதனால் பொறுப்பேற்க முடியாமல் பரிதவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர், வாக்கு வாதம் செய்த ரெங்கநாதன் குடும்பத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின் சீனிவாசன் கோவில் செயல் அலுவலர் தணலட்சுமி முன்பாக பொறுப்பேற்று கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.