சாத்தூர் அருகே ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம் செய்ய பட்ட வரத ராஜபெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.;
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, பன்னீர், சந்தனம். தேன், பால், தயிர், உள்பட 18 பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்ய பட்ட வரத ராஜபெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தராஜ பெருமாள் கோவிலில் அபிஷேக பூஜை நடைபெற்றது. சோலைமலை சுந்தராஜ பெருமாள் அலங்காரம் செய்யபட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.