ராஜபாளையத்தில் ஊராட்சி செயலர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

ராஜபாளையத்தில் இரு நாட்களாக நடைபெற்று வந்த ஊராட்சி செயலர்களின் போராட்டம் வாபஸ்

Update: 2021-05-25 15:39 GMT

ராஜபாளையத்தில் ஊராட்சி செயலர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

ராஜபாளையத்தில் 2 நாட்களாக நடைபெற்று வந்த ஊராட்சி செயலர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள் 32 பேர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்றி புத்தூர் ஊராட்சி செயலர் நீராவி என்பவரை ஊராட்சித் தலைவர் ராமலட்சுமி தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் புத்தூர் ஊராட்சி தலைவர் ராமலட்சுமி ஊராட்சி செயலர் நீராவியை இடைநீக்கம் செய்வதாக கொடுத்த மனுவை நிராகரிப்பதாகவும், ஊராட்சி செயலரை பணியிட மாறுதல் செய்வதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யவதி அளித்த உறுதியை அடுத்து இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஊராட்சி செயலர்கள் அறிவித்து களந்து சென்றனர்

Tags:    

Similar News