திமுக மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம்

கடந்த ஆட்சியில் நகர்புற மற்றும் கிராம புறங்களுக்கு அனைத்து நிதி ஒதுக்கியும் மக்களுக்கு சென்று சேரவில்லை என்றார்

Update: 2022-02-16 09:16 GMT

 இராஜபாளையம் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு தேர்தல் நடத்தவில்லை. இதனால் நகராட்சி சீர்கேடு ஏற்பட்டு சாலை வசதி, கழிவு நீர் வசதி என எந்த வசதியும் இல்லாமல் மக்கள் அவதிபடுகின்றனர். மக்களோடு நேரடி தொடர்பு அமைப்புகளுக்கு நாளுமன்றம், சட்டமன்றம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் தான் முக்கியம். ஆனால் அதிகாரிகள் கொண்டு நிர்வாகம் செய்தது அதிமுக அரசு .

மாநில மத்திய அரசு நிதி ஒதுக்கியும், சில பேர் ஒதுக்கி கொண்டனர். நகர்புற மற்றும் கிராம புறங்களுக்கு அனைத்து நிதி ஒதுக்கியும் மக்களுக்கு சென்று சேரவில்லை.கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகர் எஸ்.பி. வேலுமணி சொத்துக்கள்110 கோடி முடக்கம் என செய்தி வெளிவந்துள்ளது.

வாக்காளர்கள் வீட்டிலிருந்து விடாமல் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும்.38வது வார்டு முத்து செல்வி, 27 வது வார்டு சுமதி ராமமூர்த்தி அமைச்சர்களிடம் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர். அதிகாரிகளிடம் சொன்னதை செய்யவில்லை என முறையிடும் இடத்தில் உள்ளனர். மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். இந்த அரிய வாய்ப்பு இந்த வேட்பாளர்களுக்கு உள்ளது.

மதிமுக, அதிமுக என பல கட்சிகள் உள்ளது. எண்ண முடியாத அளவிற்கு கட்சிகள் உள்ளது என பேசினார்.மத்திய அரசு சிறு,குறு தொழில்கள் வரி விலக்கு அளிக்கவில்லை. பெரிய முதலாளிகளுக்கு அம்பானி , அதாணி குழுமத்திற்க்கு 7% இருந்து 5 % விதமாக வரி குறைத்துள்ளனர். நாம் தினந்தோறும் உபயோகிக்கும் அத்தியாவசிய பெருள்களான தீப்பட்டி, பென்சில், அலுமினியம் பாத்திரம். உட்பட அனைத்திற்க்கும் வரி போடுகிறது.

அதிமுக, பாஜக கணவன் மனைவி என ஒரு அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். மக்களை பற்றி கவலை படாமல் சுரண்டும் கட்சி என பல கட்சியினர் கண்டனத்தை தெரிவித்தனர். மக்களோடு மக்களை மோதி விட்டு கல்வரத்தை உருவாக்கும் கட்சியாக பாஜக இருக்கிறது. முதலாளிக்கு ஆதரவாக சட்டம், மத்திய அரசு இயற்றி வருகிறது. அதை இங்கு அதிமுக ஆதரித்து வருகிறது என்றார் இரா. முத்தரசன்..உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் விங்கம் மற்றும் கம்யூனிஸ்ட், திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News