ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் மயான பாதை கேட்டு கோரிக்கை
ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் மயான பாதை கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்லும் பாதையானது நடுவே நீர் ஓடும் ஓடை பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
மழை நேரங்களில் நீர் நிலைகளை கடந்து செல்ல இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு மயானத்திற்க்கு சென்று வருகின்றனர். மயானத்திற்கு சென்றுவர பாதை அமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை செய்து தரவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டு கூறுகின்றர்
மேலும் உடனடியாக இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்க்கு கொண்டு செல்ல முறையான பாதை வசதி செய்து தர வேண்டும் மேலும் தகனமேடை விரிசல் ஏற்ப்பட்டு பாதுகாப்பற்ற சூல்நிலை உள்ளது எனவே தகனமேடை மற்றும் சுடுகாட்டிற்க்கு சாலைவசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.