ராஜபாளையத்தில் யார்ஸ் புயலால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு
ராஜபாளையத்தில் யார்ஸ் புயலால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு;
நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் யார்ஸ் புயலால் நெல் சாகுபடி பாதிப்பு குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள பெரியகுளம் நகர குளம் வாண்டையார் குளம் கண்மாய் பாசனத்திற்கு உட்பட்ட விவசாய நிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வீசிய யார்ஸ் புயலால் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து சேதமடைந்தது.
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஆட்சியர் கண்ணன் உத்தரவின் படி சேதமான பயிர்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( அக்ரி ) சங்கரநாராயணன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை வேளாண் அலுவலர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.