இராஜபாளையம்: சேதமடைந்த கழவுநீர் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
இராஜபாளையம் 25வது வார்டு பகுதியில் சேதமடைந்த கல்பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை
இராஜபாளையம் 25வது வார்டு பகுதியில் சேதமடைந்த கல்பாலம் சீரமைத்து தர கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 25வது வார்டு சுப்ரமணியசுவாமி கோவில் தெரு பகுதியில் ரோட்டின் நடுப்பகுதியில் வாறுகால் செல்வதால் கடந்து செல்ல கல்பாலம் உள்ளது.
இது முறையாக சீரமைக்கப்படாததால் சேதமடைந்து வாறுகால் கழிவு நீர் சாலை முழுவதும் செல்கிறது. இப்பகுதி வழியாக நாள்தோறும் பல் வேறு பகுதி பொதுமக்கள் சைக்கிள், இருசக்கர வாகனம், மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்பவர்கள் உட்பட தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
இதனால் இந்த கல் பாலத்தை சீரமைத்து தரக்கோரி அப்பகுதிபொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்