ராஜபாளையம் அருகே ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து துணைத் தலைவர்,கவுன்சிலர்கள் போராட்டம்
ராஜபாளையம் அருகே ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து துணைத் தலைவர் கவுன்சிலர்கள் போராட்டம்;
ராஜபாளையம் அருகே ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து துணைத் தலைவர் கவுன்சிலர்கள் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் தளவாய்புரம் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த மன்றத்தின் தலைவராக முத்துசாமி என்பவர் இருந்து வருகிறார். இவர் உறுப்பினர்களைக் கலந்து ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து பல வகைகளும் வருமானத்தை பெருக்குவதில் குறியாக இருந்து வருவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் குறைவான காலத்தில் காய்கறி தள்ளுவண்டி மூலம் வீதிகளுக்கு விற்பனை செய்யும் அனைத்து தள்ளுவண்டிகாரர்களிடம் ரூ.500 முதல் ரூ.1000 லஞ்சம் பெற்று பின்னர் அனுமதி கொடுப்பதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவரது உறவினர் கதிரேசன் என்பவர் மூலம் உறுப்பினர்களை மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு புகார் மனு அனுப்பி வைத்திருப்பதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.