திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி
ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி.;
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானம், சேத்தூர், தளவாய்புரம், சுந்தரராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று பெய்த மழையினால் பூமி நன்கு குளிர்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.