குழந்தைகளை குதிரையில் மேளதாளங்களுடன் உற்சாகப்படுத்தி அனுப்பிய பெற்றோர்கள்

Update: 2022-02-16 09:18 GMT

 ராஜபாளையத்தில் குதிரையில்  குழந்தையை  பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்

ராஜபாளையத்தில் கொரோனா விடுமுறை முடிந்து இன்று மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குழந்தைகளை உற்சாகப்படுத்தி குதிரையில் மேளதாளங்களுடன்  பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.

கொரோனா காலத்தினால் பள்ளிகள் கடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் மழலையர் பள்ளியில் பயில தொடங்கும் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கிக் கொண்டிருந்தனர் இந்நிலையில் இன்று தமிழக அரசு மழலையர் பள்ளிகள் திறக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்ட உடன் ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த விஜேஷ், வெங்கடேஷ் என்பவர்கள் தங்களது குழந்தைகளை எல்.கே.ஜி பயில பள்ளிக்கு செல்ல உற்சாகப்படுத்தும் விதமாக நான்கு குதிரைகள் மற்றும் டிரம்ஸ் , தப்பாட்டம், மேளதாளங்களுடன் நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து பள்ளிக்கு அனுப்பினர். இந்த ஊர்வலம் பொதுமக்களிடையே பிரபலத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது கொரோனா வைரஸ் ஊரடங்கால் குழந்தைகளின் கல்வி கடந்த சில வருடங்களாக துவக்கத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மழலையர் பள்ளி திறக்கும் என்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் பல பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருவதால், மழலையர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தங்களது இனியாஸ்ரீ ஸ்ரீகார்த்திகா ஆகிய இரு குழந்தைகளை மேளதாளத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்ததாக பெற்றோர்கள் கூறினர்.

Similar News