இராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
இராஜபாளையம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் கண்மாய் பாசனத்தில் சுமார் 2000 ஏக்கர் பரபரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த காலத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.தற்போது நெல் அறுவடை துவங்கும் காலமாக உள்ளதால் அரசு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என இப் பகுதி விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதனை கண்டித்து தேவதானம் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் இணைந்து உடனடியாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம், மற்றும் ஆட்சியரை கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விவசாயிகளை காக்கும் அரசாக செயல்பட வேண்டும், விரோத அரசாக செயல்பட கூடாது என கூறி தமிழக அரசு நெல் கொள்முதல் அமைக்க காலம் தாழ்த்தி வரும் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.