அதிமுகவில் பாேட்டியின்றி ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு: கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியின்றி ஓபிஎஸ் இபிஎஸ் தேர்வு. அதிமுகவினர் கொண்டாட்டம்;

Update: 2021-12-06 15:15 GMT

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி இன்றி ஓபிஎஸ் இபிஎஸ் தேர்வு இராஜபாளையத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி கே .பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யபட்டதை அடுத்து இராஜபாளையம் வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன். தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் அழகுராணி. R 56 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வனராஜ் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி அழகாபுரியான் மாவட்ட ஜெயலலிதா பேரவை துனைத் தலைவர் திருப்பதி மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News