ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு மர்ம நபர்கள் ‘சீல்’
Rakachi Amman Temple-ராஜபாளையம் அருகே ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Rakachi Amman Temple-விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு நடுவே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ராக்கச்சியம்மன் கோயில் உள்ளது.
கோவிலில் பன்னிரண்டு சமூகத்தைச் சார்ந்த பல்வேறு ஊர்களில் வசித்து வரும் மக்களுக்கு இக்கோவில் குலதெய்வம் கோயிலாகவும், இஷ்ட தெய்வங்களாகும் வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவிலில் ராக்கப்பன்(55) என்பவர் பரம்பறை அறங்காவலர் மற்றும் பூசாரியாகவும் இருந்து வருகிறார். அதன்படி கடந்த ஞாயிறு இரவு பூஜையை முடித்து விட்டு கோயிலை பூட்டிவிட்டு கோவில் பூசாரி ராக்கப்பன் சென்றுள்ளார்.
பின்னர் நேற்று காலை மீண்டும் பூஜை செய்வதற்காக பூசாரி கோவில் சென்று பார்த்தபோது, கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டு இருந்துள்ளது.
12 சமூகத்தைச் சார்ந்த பொதுமக்கள் ஒற்றுமையுடன் ராக்காச்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு 12 சமூகத்தைச் சார்ந்த பொதுமக்கள் இரண்டாகப் பிரிந்தனர்.
அருள்மிகு ராக்காச்சி அம்மன் கோவிலானது எங்களுக்கு சொந்தம் எனவும், தங்களுக்கென தனியாக பூசாரி அமர்த்த்தி கோவிலில் பூஜை செய்ய வேண்டும். கோவிலின் மற்றொரு சாவி எங்களிடம் இருக்க வேண்டும் என கேட்டு ஒரு பிரிவினரும் கோவில் பூசாரி ராக்கப்பன் தலைமையில் 12 சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து கோவிலை வழிபட வேண்டும்.
மேலும் தலைமுறை தலைமுறையாக கோவிலில் பூஜை செய்து வரும் நண்டு பூசாரி வகையறாவான ராக்கப்பன் பூஜை செய்திட வேண்டும் மேலும் தனிப்பட்ட முறையில் கோவில் சாவி யாருக்கும் வழங்கப்படக் கூடாது என கோவில் பூசாரி தலைமையில் மற்றொரு பிரிவினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் மதுரை அறநிலையத்துறைக்கு சொந்தமான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு இருந்ததை கண்ட கோவில் பூசாரி ராக்கப்பன் இது தொடர்பாக வருவாய் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் தாங்கள் கோயிலுக்கு சீல் வைக்கவில்லை என புசாரியிடம் தெரிவிதுள்ளனர். மேலும் இது தொடர்பாக சம்மந்தபட்ட காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்குமாரும் கூறியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து ராக்கப்பன் மற்றும் மற்ற சமூக கோயில் நிர்வாகிகள், சீலை அகற்றவும், சீல் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோயிலை நிர்வகிக்க உரிமை கோரி ஒரு தரப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பது 12 சமூக மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2