இராஜபாளையம் பகுதியில் மக்கள் குறைகளை கேட்டு உடனடி தீர்வு கண்ட எம்.எல்.ஏ
இராஜபாளையம் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் மக்கள் குறைகளை கேட்டு உடனடி தீர்வு வழங்கினார் எம்.எல்.ஏ.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். இவர் மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார். இவர் இராஜபாளையம் நகர் பகுதியில் வாறுகால் வசதி,.சாலை வசதி, முதியோர் பென்சன்,ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பிரச்னை ஆகியவற்றில் தீர்வு காணும் விதமாக வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அனைவரையும் அழைத்து வந்து மக்களை சந்தித்து உடனடி தீர்வு காண வைத்தார்.
பச்சமடம் .மங்காபுரம் , பெரியமாரியம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் மக்களை சந்தித்து அவரிடம் மனுக்களை பெற்று தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் மனுக்களை இலகுவாக அனுப்ப அந்தந்த பகுதியில் ஆன்லைன் மூலம் (இ.சேவை) பெறப்பட்டு மக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மக்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைத்த அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனுக்கு நன்றி தெரிவித்தனர்.