அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கிய லயன்ஸ் சங்கம்

ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான்ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் 10.50 லட்சத்தில் ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது

Update: 2021-07-10 11:15 GMT

இராஜபாளையத்தில் கொரானா நிவாரண பொருட்கள் வழங்கும் போது எடுத்தபடம்

ராஜபாளையம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் லயன்ஸ் கிளப் சார்பில் 10.50 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் கொரோணா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு லயன்ஸ் கிளப் சார்பில் ரூ 10.50 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம்  மற்றும்  சானிடைசர், முக்கவசங்கள் போன்ற கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் மற்றும் மருத்துவர் கருணாகரபிரபு செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 அரசு மருத்துவர் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தனியார் அமைப்பு  வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.


Tags:    

Similar News