ஐயப்ப பக்தர்கள் சார்பில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
இராஜபாளையத்தில் வில்லாளி வீரன் ஐயப்ப பக்தி பஜனை சேவா சங்கம் சார்பில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடை பெற்றது.
இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் திருக்கோயில் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை 108 சுமங்கலி திருவிளக்கு பூஜையும், சனிக்கிழமை காலை ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு ஐயப்ப சுவாமி கன்னி பூஜை மற்றும் நாமசங்கீர்த்தன பஜனை நடைபெற்றது. பின்னர் அதிகாலையில் கஜபூஜை அதைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஐயப்ப சாமி நகரின் முக்கிய வீதிகளான பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, அம்பல புளி பஜார், சங்கரன் கோவில் முக்கு, மற்றும் தென்காசி சாலை வழியாக அன்னதான பந்தலுக்கு மதியம் வந்தடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு ஐயப்பனின் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.