இராஜபாளையத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம்

இராஜபாளையத்தில் 42 வார்டுகளில் பாேட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் செய்தார்.

Update: 2022-02-12 02:07 GMT

இராஜபாளையத்தில் 42 வார்டுகளில் பாேட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் செய்தார்.

தமிழகமே உற்று நோக்கிய தொகுதி இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதியில் தற்போது எம்எல்ஏ தங்கபாண்டியன் எதிர்த்துப் போட்டியிட்டவரை விரட்டி அடித்தவர்கள் நீங்கள். வேலை வாங்கி தருவதாக கூறி கர்நாடக காட்டுக்குள் ஓடி ஒளிந்தவரை பிடித்துள்ளோம். தற்போது வரை அவர் இந்தப் பகுதிக்கு வந்துள்ளாரா? என தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர்கே.டி.ஆர் மீது சாடிய எம்பி கனிமொழி.

நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையாெட்டி இராஜபாளையம் 42 வார்டுகளில் உள்ள திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம்.

பிரச்சாரத்தின் போது பேசிய கனிமொழி எம்.பி. இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி தமிழகமே உற்றுப் பார்த்த தொகுதி. இந்த தொகுதியில் தற்போது உள்ள எம்எல்ஏ தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிட்டவர் யாரென்று உங்களுக்கு தெரியும். அவரை ஊரை விட்டு விரட்டி அடித்து உள்ளோம். அதிமுக அரசு கஜானாவை காலி செய்து அவர்களுடைய கஜானாவை நிரப்பி சென்றவர்.

உள்ளாட்சியில் நல்லாட்சி மலர தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து உங்கள் கையில் வேட்பாளர்களாக கொடுத்துள்ளோம். நீங்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அதிமுக ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு வேலை வாங்கி தருவதாக கூறி தலைமறைவாக கர்நாடக காட்டுக்குள் ஒழிந்திருந்த வரை விரட்டிபிடித்தார்கள் என கே.டி.ராஜேந்திர பாலாஜியை சாடி பேசினார்.

இராஜபாளையம் பகுதிக்கு தேவையான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து உங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர கவுன்சிலர் மூலமே அனைத்தும் செய்து தரப்படும். ஆகையால் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும். திமுக கட்சிக்கு உதயசூரியன் சின்னத்திலும் கூட்டணி கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் வேட்பாளர் அறிமுகம் செய்துவைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

மேலும் MP.MLA தேர்தலை விட முக்கியமான தேர்தல் உள்ளாட்சி தேர்தல். BJP ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களுக்கு உரிமை கிடையாது. கர்நாடக நன்றாக தான் இருந்தது BJP - ஆட்சிக்கு வந்தபின் மதகலவரத்தை தூண்டிவிட்டுள்ளது. பள்ளியில மதகலவரத்தை துண்டிவிட்டு நம்மை பிரித்து பார்க்கிறார்கள். கொரோனா காலத்தில் மக்களுக்கு 4000 ரூபாய் கொடுப்பேன் என்று சென்னார் .சொன்னதை செய்தவர் தளபதி ஸ்டாலின். இங்கு வந்திருக்கும அதிக பெண்கள் மாஸ்க் போடவில்லை, தடுப்பூசி போட்டாலும் அனைவரும் மாஸ்க் போட வேண்டு என வழியுறுத்தி கேட்டு கொண்டர்.

Tags:    

Similar News