ஜெயலலிதா நினைவுதினம் - இராஜபாளையத்தில் அதிமுகவினர் அஞ்சலி
இராஜபாளையம் அம்மா உணவகம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, இராஜபாளையம் நகர அதிமுக சார்பில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.;
இராஜபாளையம் அம்மா உணவகம் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, நகர அதிமுக சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.
அம்மா உணவகம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுக நகர் கழகம் சார்பில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் வடக்கு நகர செயலாளர் துரைமுருகேசன் மற்றும் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், அதிமுகவை காப்போம், அம்மா புகழ் ஓங்குக என கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட இணைச் செயலாளர் அழகுராணி, நகர மகளிர் அணிசெயலாளர் ராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உருப்பினர்கள், மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.