ராஜபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-11-21 06:35 GMT

ராஜபாளையத்தில் மோசமான நிலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்து 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் நான்கு சுகாதார வளாகங்கள் இருந்தும் சரியான பராமரிப்பின்றி செயல்படாத நிலையில் உள்ளது.

மேலும் இதனை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக பயிலும் மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

700-க்கும் அதிகமான பள்ளி மாணவியர்கள் பயிலும் அரசு பள்ளியில் மாவட்ட கல்வி நிர்வாகம் ஆய்வு செய்து, வளாகத்தில் உள்ள அனைத்து சுகாதார வளாகங்களையும் செயல்பட பராமரிப்பு செய்ய வேண்டும்

மேலும் பள்ளிவளாகத்தில் படர்ந்து காணப்படும் செடி, கொடிகளை அகற்றி சுகாதாரமாக வைக்க வேண்டுமென பள்ளி மாணவியர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News